பஞ்சப்பள்ளி ஜெல்திம்மனூர் ஆற்றில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி - கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

பஞ்சப்பள்ளி ஜெல்திம்மனூர் ஆற்றில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி - கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை.


பாலக்கோடு, மார்ச் 31: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஞ்சப்பள்ளி ஊராட்சி ஜெல்திம்மனூர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், நகர செயலாளர் ராஜா, முன்னாள் பஞ்சப்பள்ளி கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஜெல்திம்மனூர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, கால்வாய் வழியாக அமானிமல்லாபுரம் ஏரி, ராஜபாளையம் ஏரி, பஞ்சப்பள்ளி ஏரி, சாமனூர் ஏரி உள்ளிட்ட 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.


பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஏரிகளுக்கு தண்ணீரை பிரித்து அனுப்பும் வகையில் நீர்வளத்துறை நிதியில் இருந்து ரூ.4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் அசோக், ராஜா, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad