காரிமங்கலம் அருகே ஜாதி சான்றிதழ் குளறுபடி: ஊராட்சி செயலாளர் பணிநீக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 மார்ச், 2025

காரிமங்கலம் அருகே ஜாதி சான்றிதழ் குளறுபடி: ஊராட்சி செயலாளர் பணிநீக்கம்.

1002625073

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமார், பணியில் சேரும் போது வழங்கிய ஜாதி சான்றிதழில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், அந்த நேரத்தில் பணியாற்றிய அதிகாரி இந்த விவகாரத்தை வெளிப்படுத்தினார், இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாதி சான்றிதழ் விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறு காரிமங்கலம் ஊராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. விசாரணையில் சான்றிதழில் தவறு இருப்பது உறுதியானதால், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் ஜெயக்குமாரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad