பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு₹ 25லட்சம் நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு₹ 25லட்சம் நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பாலியல் துன்புறுத்தலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டம் செய்தனர்.


பாலக்கோடு அடுத்துள்ள கிராமத்தில் கடந்த மாதம் 22ம் தேதி 4 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் முதியவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இதில் ஈடுபட்ட  குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கிடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட நிர்வாகிகள் நாகராசன், கலாவதி உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad