அதன் தொடர்ச்சியாக தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் மாலை 5.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாலக்கோடு நகர செயலாளர் P.K. முரளி தலைமையிலான கூட்டத்தை, பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் S. முனியப்பன் வரவேற்று தொடங்கினார்.
கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் (சேலம்) இரா. தமிழரசன், தலைமை பேச்சாளர்கள் திருமதி. குடியாத்தம் புவியரசி, குமரி. பிரபாகரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
2026 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தமிழகத்தின் தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறையக்கூடும். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க, தொகுதி மறுசீரமைப்பை மேலும் 30 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
பாலக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், வாக்குச் சாவடி முகவர்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். கூட்டத்தின் இறுதியில் மாரண்டஅள்ளி பேரூர் செயலாளர் M.A. வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் திமுகவின் கண்டனக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக