கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணியின் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த திமுகவின் கூட்டத்திற்கு பேரூராட்சி செயலாளர் மோகன், கடத்தூர் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், தருமபுரி ஒன்றிய செயலாளர் சக்திவேல், பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோடிஸ்வரன், பேரூராட்சி தலைவர் கேஸ்மணி, மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன், மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து பேசினார். எழுத்தாளர் மதிமாறன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர், தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய கல்விக் கொள்கை காரணமாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்று விமர்சித்தனர்.
இந்த கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், பொதுகுழு உறுப்பினர் லட்சுமணன், வக்கீல் முனிராஜ், நிர்வாகிகள் வடிவேல், ராஜேந்திரன், வெற்றிவேல், முனியப்பன், குபேந்திரன், பச்சையப்பன், அழகிரி, சர்மா, ஷானவாஷ், ஐடி விங் நிர்வாகி தமிழகன், சண்முகம், கண்ணப்பன், வேலுசாமி மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக