பாலக்கோட்டில் புதன்கிழமை திமுக பொதுக்கூட்டம் – தொண்டர்களுக்கு பி.கே.முரளி அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

பாலக்கோட்டில் புதன்கிழமை திமுக பொதுக்கூட்டம் – தொண்டர்களுக்கு பி.கே.முரளி அழைப்பு.


பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதன்கிழமை நாளை மாலை 5 மணிக்கு திமுக நகர செயலாளர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற உள்ளது.


நிகழ்ச்சிக்கு திமுகவின் மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் முன்னிலை வகிக்கிறார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், பி.பழனியப்பன் கண்டன உரையாற்றுகிறார். இதில் தலைமை திமுகவின் தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் புவியரசி, குமரி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்க்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் உரையாற்ற உள்ளனர்.


எனவே இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு பாலக்கோடு நகர திமுக செயலாளர் பி.கே.முரளி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad