இண்டூரில் மத்திய அரசை கண்டித்து திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

இண்டூரில் மத்திய அரசை கண்டித்து திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்.

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வைகுண்டம் தலைமையில், இண்டூர் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், 100 நாள் வேலை உறுதி திட்ட நிதியான 4000 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், அமைப்பு சாரா ஓட்டு அணி விஜயன், அவைத்தலைவர் சி. கே. வேலு, துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எம்பி பெரியண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டம், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் பெரும் வெகுஜன ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad