இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், அரசு வழக்கறிஞர் முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் ஏரி வேலை திட்டத்தில் பணியாற்றிய கூலி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு தராமல் ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் செழியன், முத்துசாமி, தருமன், வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக