தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட குழு நிர்வாகிகலாவதி முன்னிலை வகித்தனர். பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி ஊராட்சி பாளையம் கிராமத்திலுள்ள ஏழை மக்களுக்கு அப்பகுதியில் உள்ள கரடு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடு, பெரியானூர் கிராமத்தில் ஆற்றை சுற்றி தகுதியற்ற நபர்களுக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வட்டக் குழு தோழர்கள் ஜெயராமன், கோவிந்தசாமி, வரதராஜன், சேகர், பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக