தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தர்மபுரியில் திமுகவின் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தர்மபுரியில் திமுகவின் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிராக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் "தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் திமுகவின் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.


அதன்படி, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தர்மபுரி மேற்கு ஒன்றியத்தில் இன்று (12.03.2025) மாலை 5.00 மணிக்கு வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு, தர்மபுரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. D.L. காவேரி தலைமையிலான கூட்டத்தில், தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான் மாது வரவேற்புரை ஆற்றினார்.


கூட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. தர்மசெல்வன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் V.P. ராஜன் (Ex MLA), திமுக செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் முனைவர் சபி சுலைமான், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி (Ex MLA) உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.


தொகுதி மறுசீரமைப்பின் பாதிப்பு:
2026 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தமிழகத்தின் தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறையக்கூடும். மேலும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பை மேற்கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


பொதுக்கூட்டத்தில், "செல்வோம் 200! படைப்போம் வரலாறு!!" என முழங்கிய திமுக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.


நிகழ்ச்சிக்கு தர்மபுரி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் C. செல்வராஜ், V. தண்டபாணி, C. தென்னரசு, வெண்ணிலாமூர்த்தி, M. சதீஷ்குமார், P. பசுவராஜ், KSR. அன்பழகன், KS. அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாநில நிர்வாகி R.P. செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் C. செல்வராஜ், தங்கமணி, ஆறுமுகம், ரேணுகாதேவி, ஒன்றிய செயலாளர்கள் A. சண்முகம், மல்லமுத்து, வைகுண்டம், கருணாநிதி, மடம் முருகேசன், வீரமணி, பேரூர் செயலாளர்கள் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சரஸ்வதி துரைசாமி, சோலைமணி, வேலுமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சி நன்றியுரையை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் (தகவல் தொழில் நுட்ப அணி) S. உதயசூரியன் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad