மும்மொழிக் கொள்கை, தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்தும் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கடத்தூர் பேருந்து நிலையத்தில் கடத்தூர் பகுதி திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் நகர செயலாளர் மோகன், வழக்கறிஞர் முனிராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பச்சையப்பன், பேரூராட்சி தலைவர் கேஸ் மணி, மதன் பாலாஜி, கதிரேசன் உள்பட பலர் உடன் இருந்தனர், இந்த சம்பவம் கடத்தூர் காவல் நிலைய அருகே நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதை அங்கிருந்த காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததை பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக