தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பாக சரியான முறையில் இயக்கப்படுகிறதா என்பதையும், பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் 09.03.2025 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையங்களில் தேவையான மின் வசதி, பேருந்து வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதிடும் செய்திடும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்தும், பேருந்து நிலையங்களில் இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இருப்பது குறித்தும் மற்றும் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
பேருந்துகள் வருகை, கால அட்டவணை உள்ளிட்டவை குறித்தும், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள் குறித்தும், கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பேருந்து நிலையத்தில் RO அமைப்பின் மூலம் சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, இவ்வமைப்பில் பழுதுகள் ஏற்படாமல் தொடர்ந்து பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்திதர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைமேடைகளில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தம் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் உள்ள உணவுப்பொருட்கள் தரமானதாக உள்ளதா எனவும், உரிய உணவு பாதுகாப்பு சான்று மற்றும் உணவுப்பொருட்கள் காலாவதி தேதிக்குள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக