தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சமையல்கூடத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எவ்வாறு மாணவர்களுக்கு பயன்படுகிறது என்பதை இன்று (12.03.2025), தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்காக தயார் செய்யப்பட்ட உணவுகளை சுவைத்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் முக்கிய அம்சங்கள்:
🔹 காலை உணவு வழங்கும் நேரம் மற்றும் உணவின் தரம் குறித்து ஆய்வு
🔹 முந்தைய நாட்களில் வழங்கப்பட்ட உணவின் விவரம் கேட்டறிதல்
🔹 உணவு ஒரு முறைக்கு மேல் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு
🔹 உணவின் சுவை, சுத்தம், சுகாதாரம் குறித்து அலுவலர்களுக்கு உத்தரவு
🔹 சமையல்கூடத்தின் தூய்மை மற்றும் பொருட்கள் இருப்பு நிலை ஆய்வு
மாவட்ட ஆட்சியர், மாணவ, மாணவிகளுக்கு உணவு உரிய நேரத்தில், சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் வழங்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, நகர் நல அலுவலர் திரு. இலட்ஷியவருணா, துப்புரவு ஆய்வாளர் திரு. சுசீந்தரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக