தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த பி. தர்மச்செல்வன், அண்மையில் ஆட்சியர், எஸ்.பியை மாற்றிவிடுவேன் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், தர்மச்செல்வன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணி நீக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த பொறுப்பில் தர்மச்செல்வன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், கட்சி கூட்டத்தில் அவர் பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து, மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திமுக தலைமை கழகத்தின் உத்தரவின்படி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக புதிய பொறுப்பேற்றுள்ளார். இது கட்சியின் நிர்வாகத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக