மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து பென்னாகரம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து பென்னாகரம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


மும்மொழிக் கொள்கை, தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்தும் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கக்கூடிய கல்வி நிதி வழங்க வேண்டும் மற்றும் மும்மொழிக் கொள்கை வேண்டாம் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் தொகுதி சீரமைப்பை கைவிட வேண்டும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்  உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பி திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad