தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம் – பணிவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம் – பணிவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு!.


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 21, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கணக்காளர், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கான தகுதியான நபர்களை நேரடியாக தேர்வு செய்ய உள்ளன.


பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதியானோர் இதில் கலந்து கொள்ளலாம். முகாம் இலவசம் ஆக நடத்தப்படுவதால், வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். விருப்பமானோர் மார்ச் 21, காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் கலந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad