தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2J ன் படி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கள ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2J ன் படி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கள ஆய்வு.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை உதவி மின் பொறியாளர்  அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக களாய்வு செய்யப்பட்டது. இந்த களாய்வில் தேவையான பதிவேடுகளை சரி பார்த்து நகல்கள் எடுக்கப்பட்டு அந்த நகல்களில் உதவி மின் பொறியாளர் பாலமுரளி அவர்களால் சான்றோப்பமிட்டு வழங்கப்பட்டது. 


இந்த களாய்வு தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மா. முனிராஜ், தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.கணேஷ், மாவட்ட செயலாளர் S.P.நாகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் P.வாசுகிநாதன், மாவட்ட ஆலோசகர் நரசிம்மன், ஆகியோர் இந்த களாய்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad