இதை கண்டு கடை உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும், கடை முழுவதும் தீ வேகமாக பரவியது. தகவலின் பேரில் பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் தீ முழுவதும் பரவியதால், தர்மபுரியில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் நீர்பீச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சாமான்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பாலக்கோடு காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், மின்பலகையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைக் கண்டறிய, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக