தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 8 குடும்பங்களுக்கு வீடு பழுது பார்க்க 50 ஆயிரம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலக்கோடு ஒன்றியத்திற்கு ப்பட்ட பி.செட்டிஅள்ளி ஊராட்சி பொரத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 8 நபர்களுக்கு அவர்கள் குடியிருக்கும், பழுதடைந்த வீடுகளை பழுது பார்க்கும் வகையில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பழுதடைந்த வீடுகளை பழுது பார்க்க தலா 50 ஆயிரம் ரூபாய் விட்டு குடும்பங்களுக்கு மொத்தம் 4 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி ஆணையை முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக