மாட்லாம்பட்டியில் மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது - 7 கிலோ குட்கா பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

மாட்லாம்பட்டியில் மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது - 7 கிலோ குட்கா பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக காரிமங்கலம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,


இதையடுத்து காரிமங்கலம் அடுத்த  மாட்லாம்பட்டி கடைத்தெரு பகுதியில்  போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மணி (வயது.50)  என்பவரது மளிகை  கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.


இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மளிகை  கடையில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், தூலிப், உள்ளிட்ட 7 கிலோ அளவிலான  4ஆயிரத்து 280 ரூபாய் மதிப்புள்ள  குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad