பாலக்கோடு திம்மம்பட்டியில் உள்ள ஸ்ரீ சீர்வி சமாஜ் ஆலயத்தில் ஹோலி பண்டிகை திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

பாலக்கோடு திம்மம்பட்டியில் உள்ள ஸ்ரீ சீர்வி சமாஜ் ஆலயத்தில் ஹோலி பண்டிகை திருவிழா.

1002611238

பாலக்கோடு திம்மம்பட்டியில் உள்ள ஸ்ரீ சீர்வி சமாஜ் ஆலயத்தில் ஹோலி பண்டிகை திருவிழாவில்  ஒருவருக்கொருவர்  வண்ணம் பூசி விமர்சையாக கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திம்மம்பட்டியில் உள்ள  ஸ்ரீ சீர்வி சமாஜ் ஆலயத்தில் ஹோலி பண்டிகை திருவிழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


ஹோலி பண்டிகை இந்திய கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இது அன்பு, மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை வெளிப்படுத்தும் விழாவாகும், வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, இந்த  விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையண்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து நெற்றியில்  திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.


பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். ஹோலி பண்டிகையின் முதல் நாளான இன்று  ஹோலிகா தஹன் அல்லது சோட்டி ஹோலி நிகழ்ச்சி நடைபெற்றது.


இத்திருருவிழாவை முன்னிட்டு பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள்   ஒன்று கூடி வண்ணங்கள் நிறைந்த  தண்ணீரை ஒருவர் மீது ஒருவர்  வீசி விளையாடினர். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் உற்சாகமாக  நடனம் ஆடி தங்ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad