பாலக்கோட்டில் குடிசை வீடு எரிந்து சாம்பல் - காரணம் குறித்து போலீசார் விசாரணை - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

பாலக்கோட்டில் குடிசை வீடு எரிந்து சாம்பல் - காரணம் குறித்து போலீசார் விசாரணை


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரியப்பசெட்டி தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது.40) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது கனவர் ஹரிகரன் கடந்த  10 வருடங்கள் முன்னர் இறந்துவிட்டார், இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர், மகளுக்கு ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். நாகலட்சுமி மகளை காண கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு சென்றிருந்தார்.


இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு இவரது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. பூட்டிய வீட்டினுள் இருந்து புகை வந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுபடுத்தினர் இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானது,


இதில் வீட்டில் இருந்த  ஃப்ரிட்ஜ், துணிமணிகள், தட்டுமுட்டு சாமான்கள் உணவு பண்டங்கள் என அணைத்தும் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு புதிய வீடு கட்ட ஆவணம் செய்வதாக தெரிவித்தார்.


இச்சம்பவம் குறித்து   வழக்கு பதிவு செய்த பாலக்கோடு போலீசார் மின் கசிவா அல்லது எரிவாயு சிலிண்டர் கசிவால் விபத்து ஏற்பட்டதா என்பது  குறித்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad