தருமபுரியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரமலான் சிறப்புரை நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட சமூக சேவை அமைப்புகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே தலைவர் ஜனாப் சையத் கபீர் தலைமையிலினார். சிறப்பு விருந்தினராக தங்கம் மருத்துவமனை மருத்துவர் செந்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை முன்னெடுத்தார். மேலும், மௌலானா ஃபஜ்லே கரீம் சிறப்புரை ஆற்றினார். மருத்துவர் முஹையுதீன் அப்துல் காதிர் இஸ்லாமிய நோன்பின் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை விளக்கி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மணி, அருணாசலம், கிருஷ்ணன், செந்தில், மருத்துவர் முஹம்மத் ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் மூலம் நோன்பின் மகத்துவம், மனித நேயம், சமுதாய ஒற்றுமை ஆகியவை குறித்து முக்கியமான கருத்துகள் பகிரப்பட்டன. மதத்திற்கப்பால் மனிதாபிமானம் மேலெழ வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்து கருத்து தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக