நிகழ்ச்சிக்கு தொகுதி துணைத் தலைவர் அப்ரார் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியினை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாவித் தொகுத்து வழங்கினார்.தருமபுரி மொரப்பூர் பாலக்கோடு தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சி தர்மபுரி மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அம்ஜ்த் பாஷா துவக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர்சித்திக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர், A.G சர்ச்சினுடைய பாதிரியார் ஜான்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இப்தார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, மேற்கு மாவட்ட தலைவர் ஷபியுல்லா, அனைத்து ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மத சகோதரர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர், தொகுதி செயலாளர் ஜீலான் நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக