கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா - மாணவர்களின் கலை நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா - மாணவர்களின் கலை நிகழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கவுண்டனூர் கிராமத்தில்  உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் ஆண்டு விழா  தலைமை ஆசிரியா் வெங்கடேசன்  தலைமையில்  நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செண்பகவள்ளி, ஊர்கவுண்டர் அருள்பாண்டி, மந்திரிகவுண்டர் ராமன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் ஆண்டு விழாவில் நடனம், நாட்டியம் என தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர். மாணவ, மாணவிகள் கவிதை, பேச்சு, நடனப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்  வழங்கி பாராட்டினர்.


இவ்விழாவில்  உதவி தலைமை ஆசிரியர் சூர்யா, ஆசிரியா்கள், பெற்றோர்கள்  ஊா்பொதுமக்கள் என திரளானோர்  பங்கேற்றனா். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி, கலைத்திறன் உள்ளிட்ட பன்முக திறன்களை வெளிப்படுத்தும் விதமாக அரசு பள்ளி செயல்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad