பாப்பாரப்பட்டியில் மொபைல் போனில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்த இருவர் கைது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

பாப்பாரப்பட்டியில் மொபைல் போனில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்த இருவர் கைது

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டியில் இன்டூர் சாலையில் ரோந்து பணியில் ராஜேந்திரன் எஸ்ஐ சென்று கொண்டிருந்தார். சாலையின் ஓரமாக இருவர் நின்று கொண்டிருந்தனர் அவர்களைத் சுற்றி கூட்டமாக இருந்தனர். சந்தேகம் அடைந்த எஸ்ஐ அங்கு சென்று பார்த்த போது மொபைல் போனில் லாட்டரி சீட்டு நடந்து கொண்டு இருந்தது கூறப்படுகிறது. 


இருவர்கள் மொபைல் போனையும் பறிமுதல் செய்து கொண்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது. குமார் (57) மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் சண்முகம் (42) பாப்பாரப்பட்டி அப்பு முதலியார் தெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது நீதிமன்றத்தில் ஆஜர் படித்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad