இந்நிலையில், அரூர் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய செயலாளர் மற்றும் மாநில நூலக குழு உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார், MLA அவர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
சம்பத்குமார் MLA தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவையர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ், IAS அவர்களிடம் பள்ளிக்கட்டிடப் பிரச்சினை எடுத்துக் கூறினார். இதனை அடுத்து, பொதுப்பணித்துறை மூலம் புதிய மேற்கூரைக்காக காங்கிரீட் போட ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் உடனடி பணி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிமுகவின் மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், வார்டு கவுன்சிலர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக