மருதம் நெல்லி ஜெயம் கல்லூரியில் கணினி துறை சார்பில் தேசியக் கருத்தரங்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

மருதம் நெல்லி ஜெயம் கல்லூரியில் கணினி துறை சார்பில் தேசியக் கருத்தரங்கம்.

 

நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் கணினி துறை சார்பில் தகவல் பரிமாற்றமும் செயற்கை நுண்ணறிவும் என்ற பொருண்மையில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.


நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார்.


குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.பரஞ்சோதி மற்றும் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி துறைத் தலைவர் சி.சத்தியமூர்த்தி  வரவேற்று பேசினார். கணினித் துறை உதவிப் பேராசிரியர்கள் கெள. சத்யா, செ.சித்ரா, அ.ஜோதிமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர்.


நிகழ்வின் முதல் அமர்வின் சிறப்பு விருந்தினராக ஆசான் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தொல்காப்பியரசு சிறப்புரை ஆற்றினார் அவர் பேசுகையில் " மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்ப காலத்தில் கணினி பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. மாணவர்கள் தினமும் தங்களை புதிய புதிய கற்றலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் "


இரண்டாம் அமர்வில்  சிறப்பு விருந்தினராக தொழில்நுட்ப வல்லுநர் கணேஷ் குமார் ராஜா அவர் பேசுகையில் "மாணவர்கள் தொழில் நுட்பத்தை கவனமாக கையள்வதை குறித்தும், தகவல் சேகரிப்பு குறித்து விளக்கம் தந்தார்.


நிறைவாக கணினி அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ப.முனியப்பன் நன்றி கூறினார். மூன்றாம் ஆண்டு கணினி துறை மாணவி சி.சுமித்ரா நிகழ்வை தொகுத்து வழங்கினார், இக்கருத்தரங்கில் தருமபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு கல்லூரிகள் மாணவர்கள், பேராசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad