பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கடைகள் ஏல முறைகேடு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கடைகள் ஏல முறைகேடு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி கட்டிய புதிய பேருந்து நிலையம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தற்போது மார்ச் 20, 2025 அன்று பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் விடப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்த ஏல நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், சாதாரண சிறு வியாபாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது, இதற்காக பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கடைகளின் வைப்புத் தொகையை ₹6 லட்சத்திலிருந்து ₹1 லட்சமாக குறைக்க வேண்டும் என்பதுடன், கடைகள் ஏல முறையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மதன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். பேரூராட்சி நிர்வாகத்தினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad