தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தார். இந்த தகவலை மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு தெரிவிக்க, உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை மீட்டனர். அடையாளம் தெரியாத நிலையில், பெயர் மற்றும் விலாசம் அறியாத இந்த உடல், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர், ஆதரவற்றவரின் உடலை தங்கள் உறவாக எண்ணி, மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் தகுந்த மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். இறுதிச்சடங்கில் மொரப்பூர் ரயில் நிலைய தலைமை காவலர் தேவராஜ், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் ஜெய் சூர்யா, மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மக்கட்சேவை முனைப்புடன் செயல்படும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர், இதுவரை 138 உடல்களை நல்லடக்கம் செய்து, ஆதரவற்றோருக்கான உறவாக திகழ்ந்து வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள், ஆதரவற்றோர், ஏழ்மையில் இறந்தவர்கள் என அனைவருக்கும் இறுதிச்சடங்குகளை செய்யும் சமூக அக்கறையுள்ள இந்த அமைப்பின் சேவையால் பலர் மனம்திறந்து பாராட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக