அதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டம் ஏரியூர் மூல பெல்லூர் இருளர் குடியிருப்பு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் மேலங்கி வழங்கி, கல்வியில் முன்னேறி சமூகத்திற்குத் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசி ராமன், வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்வை ஏரியூர் வைகை தொண்டு நிறுவனர் குமரேசன் தலைமையில் ஒருங்கிணைத்தார். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், செந்தில், சண்முகம், கணேஷ், மூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கி, அவர்களது எதிர்கால கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி தெரிவித்தனர்.
இத்தகைய சமூக அக்கறையுடன் செயல்படும் மை தருமபுரி அமைப்பினர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக