தருமபுரி மாவட்டத்தில் நம் தமிழர்களின் வீர விளையாட்டுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பித்து வரும் தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி, கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லாம்பட்டி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பள்ளி நிறுவன ஆசிரியர் சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பல மாணவர்கள் இந்த வீரக் கலைகளை கற்றுவருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து பயிலும் நல்லாம்பட்டி தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேலங்கி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் திறமையைப் பாராட்டும் வகையில், மை தருமபுரி அமைப்பினர் மேலங்கி வழங்கி அவர்களின் பயிற்சியை ஊக்குவித்தனர்.
இவ்விழாவில் தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் சண்முகம் அவர்கள் தலைமை தாங்கியதாகும். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், செந்தில், சண்முகம், கணேஷ், மூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களின் உற்சாகத்தை மேலும் தூண்டிய இந்த விழா, சமூக அக்கறை கொண்ட மை தருமபுரி அமைப்பின் பாராட்டிற்குரிய செயலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக