தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கரகூர் கிராமத்தில் சேலம் பீரீத்தம் மருத்துவமனை மற்றும் ஏ.ஆர்.டி.எஸ் தொண்டு நிறுவனம் தர்மபுரி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் கூட்டமைப்பின் தலைவர், ஏ.ஆர்.டி.எஸ்.தொண்டு நிறுவன இயக்குனருமான ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமினை பேவுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ். டி.என்.சி.குழும மண்டல மேலாளர் திரு.தம்பிதுரை, கூட்டமைப்பின் துணை தலைவர் துரைமணி ஆகியோர் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இம்முகாமில் மருத்துவர்கள் தமிழ் மகன், மனோஜ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தமான பரிசோதனைகள், மூட்டு தேய்மானம், கை கால் வலி, முதுகு வலி, காது, மூக்கு, தொண்டை பிரச்சனை, இரத்த போக்கு, கர்பப்பை பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் பரிசோதனை, சளி பரிசோதனை, கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீரகம், இருதயம், உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு குறைபாடு உடையவர்களை கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கியதுடன், உயர் சிகிச்சை தேவைபடுபவர்களுக்கு உரிய பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
இம்முகாமினை தொண்டு நிறுவன ஒருங்கினைப்பாளர் வனிதா, தமிழ், சந்திரா, குமுதா உள்ளிட்டோர் ஒருங்கிணைந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக