தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அண்ணாமலை அள்ளி கிராமத்தை சேர்ந்த முதியவர் ரங்கநாதன் (வயது.70) விவசாயி. அண்ணாமலை அள்ளியில் உள்ள பாலமன ஏரி பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ள நிலையில் ரங்கநாதன் நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதியவர் அண்ணாமலைஅள்ளி கூட்ரோடு அருகே, மொபட்டில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது. 49) என்பவர் முதியவரை தடுத்து நிறுத்தி தாக்கியதுடன், வழக்கை திரும்ப பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
காயமடைந்த முதியவர் சிகிச்சை பெற்று கொண்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக