பாலக்கோடு கடை தெருவில் உள்ள ஞான பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு -திரளான பக்தர்கள் சாமி தரிசனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

பாலக்கோடு கடை தெருவில் உள்ள ஞான பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கடை தெருவில் உள்ள  ஞான பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஞானபிள்ளையார் கோவிலில் அதிகாலை முதல் சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. 


பின்னர் சாமிக்கு முத்தங்கி அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad