பாலக்கோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் விழா – கேக் வெட்டி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

பாலக்கோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் விழா – கேக் வெட்டி கொண்டாட்டம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.


அக்கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்தினம், கோவிந்தராஜ், மகளிரணி மாவட்ட துணை செயலாளர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் கட்சி கொடியை ஏற்றி, கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தனர்.


நிகழ்வில், தேமுதிக ஒன்றிய அவை தலைவர் முருகன், நகர அவை தலைவர் கிருஷ்ணன், நகர துணை செயலாளர் ராஜா, சாந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad