தருமபுரியில் தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் சார்பில், மார்ச் 23, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று KAMALAM INTERNATIONAL SCHOOL வளாகத்தில் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளன. பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் என ஆண், பெண் இருவரும் வயது வரம்பில்லாமல் பங்கேற்கலாம்.
காலை 8:30 AM முதல் மாலை 4:00 PM வரை நடைபெறும் இம்முகாமில், தகுதியானோர் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் என தனியார் ஆசிரியர் மன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக