பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெனசியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், மெனசி பூதநத்தம் குண்டலமடு கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி கண்டன உரையாற்றினார், விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி முழக்கமிட்டார், நிர்வாகி பழனியப்பன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் தனுஷன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மனோகரன், சேகர், சென்னக்கிருஷ்ணன், மாதையன், செல்வம் மற்றும் ராஜேந்திரன், வையாபுரி, தனபால், சாமிக்கண்ணு, நல்லதம்பி, கவியரசன், ஜகன், தமிழ்மணி உள்ளிட்ட ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக