இந்த இணைப்புச் சாலைகளில் அதிக அளவு பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கடந்து செல்கின்றனர். இதில் முக்கிய இணைப்பு சாலையாக மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு இன்றி கடந்த செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின் பேரில், பாலக்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் ஆய்வு மேற்கொண்டனர், இந்த ஆய்வின் போது விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பேரிகார்டுகள் அமைக்கவும், போதிய எல்.இ.டி மின்விளக்குகள், மற்றும் விபத்து தடுப்புக்கு கூம்புகள் உடனடியாக அமைத்திடவும் , இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிநவீன கேமராக்கள் அமைத்திடவும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு டி.எஸ்.பி மனோகரன் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், காவல் உதவி ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக