தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், ‘சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சிக்கான கலைக்குழு தேர்வுகள் மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள், தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான குழுக்கள் இதில் தேர்வு செய்யப்படும்.
தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் கலைக்குழுக்கள், மார்ச் 20 ஆம் தேதிக்குள் www.artandculture.tn.gov.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள கூகுள் பார்மின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு பொறுப்பாளர் ஆ.மணிகண்டன் (99444 57244) தொடர்பு கொள்ளலாம்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற கலைக்குழுக்கள் தமிழ்நாட்டின் 8 இடங்களில் நடைபெறும் ‘சங்கமம்’ திருவிழாவில் பங்கேற்கலாம். சிறந்த கலைக்குழுக்கள் 2026 ஆம் ஆண்டு சென்னை நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக