அதியமான்கோட்டை பகுதியில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

அதியமான்கோட்டை பகுதியில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் தலைமையில் நடத்தினார்.


இக்கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். உலக தண்ணீர் தினத்தின் முக்கியத்துவம், அதியமான்கோட்டை ஊராட்சியின் நிர்வாக நடவடிக்கைகள், சுத்தமான குடிநீர் விநியோகம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, RA வரைபடம் (FRA Atlas) உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் பாதுகாப்பு, மகளிர் உரிமை திட்டங்கள், தொழுநோய் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் உரையாற்றுகையில், தருமபுரி மாவட்டத்தின் 251 ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தண்ணீரின் மதிப்பையும் அதன் பாதுகாப்பையும் வலியுறுத்தி, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவு, நீர் மாசுபாடு தடுக்கல், மரம் வளர்த்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.


மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் பொதுமக்களை ஊக்குவித்தார். இதில் மண்டல உதவி திட்ட அலுவலர் திருமதி. உமா, தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. நிர்மல் ரவிக்குமார், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் திரு. சிவக்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு. சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இச்சிறப்பு கிராம சபை கூட்டம் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad