ஈ. அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலை நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

ஈ. அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலை நிகழ்ச்சி.

1002712017

தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஈ. அக்ரஹாரம் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று (29.03.2025) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.ஆதிமூலம் தலைமையேற்று, மாணவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியை ஆசிரியர் சு.சரிதா வரவேற்று, வா.சுரேஷ் பாபு நன்றி கூறினார்.

1002712020

விழாவில் ஆசிரியர்கள் ரா.சக்திவேல், ஜெ.சசி, கே.சந்திரலேகா, பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முதல் வகுப்பு மாணவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோபனா, துணைத்தலைவர் சா.சஸ்பவதி, நன்கொடையாளர் சர்வேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்புரையாற்றினர்.


விழாவில், மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நிகழ்த்தினர். நிகழ்வின் போது, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் "பசுமை தேசம்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad