இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலை செயலாளர் வஞ்சி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுனன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொன்னுசாமி, மனோகரன், பழனி, தீர்த்தகிரி, மாசிலாமணி, செல்வம், சக்திவேல், ராஜசேகர், ராஜகுமாரன், சத்யராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கரும்பு உற்பத்தி செலவு இருமடங்காக அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்றுகள், வறட்சி, புயல், வனவிலங்குகள் மற்றும் வெல்லம் சந்தை சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் மகசூல் இழப்பு மற்றும் பிழைத்திறன் குறைவு ஏற்படுகிறது. இதனால், கரும்பு சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்துள்ளது.
இந்த சூழலில், கரும்பு விவசாயத்தையும் சர்க்கரை உற்பத்தி தொழிலையும் பாதுகாக்கும் வகையில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து, மாநில வருவாய் பங்கிட்டு முறை சட்டத்தை ரத்து செய்யவேண்டும். மேலும், மாநில அரசு பரிந்துரை செய்த விலையை ஆண்டு தோறும் அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
- கரும்புக்கான ஊக்கத்தொகையை டன் ஒன்றுக்கு ₹1,000 ஆக உயர்த்த வேண்டும்.
- கரும்பிலிருந்து பெறப்படும் உப-பொருட்களின் லாபத்தில் 50% விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
- லாரி வாடகை மற்றும் கரும்பு வெட்டும் இயந்திரக்கூலியை ஆலை நிர்ணயிப்பது போல், வெட்டு ஆட்களுடன் ஒப்பந்தம் செய்து ஆலை நிர்வாகமே கரும்பை வெட்டிக்கொள்ள வேண்டும்.
- கரும்பு விவசாயிகள் பொதுப் பேரவை கூட்டம் நடத்த வேண்டும்.
- 18 கோடி ரூபாய் லாபத்தில், விவசாயிகளுக்கு பங்கு மற்றும் ஈவுத்தொகை வழங்க வேண்டும்.
- ஆலை மாசு கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- பொது பிரிவு அலுவலர்களை முறையான மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக