மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு ஏழை மக்களுக்கு சென்றடையும் வகையில் தினந்தோறும் சேவை செய்து வருகின்றனர்.
இந்த அமைப்பின் மூலம் பெற்றோர் இல்லாத மாணவர்களை படிக்க வைத்து வருகின்றனர். அதில் நான்கு மாணவர்களுக்கு தொழிற்நிறுவனத்தில் வேலையும் பெற்று தந்துள்ளனர். தற்போது மூன்று மாணவர்களுக்கு தேவையான ஒரு வருட கல்வி கட்டணத்தை தருமபுரி ஸ்ரீ மஹாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவனர் வெங்கடேஷ் பாபு இரண்டு மாணவிகளுக்கும், PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ் குமார் ஒரு மாணவருக்கும் இணைந்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக