தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருள்மிகு பழைய சுப்பிரமணிய சாமி கோயில் கட்டுமான பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது. வருகிற வைகாசி மாதத்தில் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை, காலை 11:00 மணி) கோயிலின் கொடிமரம் பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்பாக, கோயில் விழாக்குழுவினர் ஊர்வலமாக வீதி உலா வந்து, சிறப்பு பூஜைகள் நடத்தி கந்த சஷ்டி கவசம் பாடினர். பின்னர், கிரேன் எந்திரத்தின் உதவியுடன் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, "அரோகரா" கோஷங்களுடன் திருப்பணி நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக