தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுக்கா சின்னமாட்டலாம்பட்டி கிராமத்தில் இன்று பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்டோர் தங்களை இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா. கணேஷ் M.Sc தலைமையிலில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மேலும், மாவட்ட செயலாளர் S.P. நாகராஜ், மாவட்ட இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ரா. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.
தங்கள் கிராமத்தின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு இந்த இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள், விரைவில் தலைமையின் ஒப்புதலுடன் கிராமத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ போர்டு திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக