பாலக்கோடு தனியார் மண்டபத்தில் டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நல சங்க முதலாம் ஆண்டு துவக்க விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 மார்ச், 2025

பாலக்கோடு தனியார் மண்டபத்தில் டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நல சங்க முதலாம் ஆண்டு துவக்க விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நல சங்கங்களின் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு துவக்க விழா ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்க்கு மாநில நிறுவன தலைவர் பிரவின்தாஸ்,மாநில தலைவர் பொன்ராஜ், கெளரவ தலைவர் கிருஷ்ணன், கூட்டமைப்பு தலைவர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினார்.


இவ்விழாவில் மாநில துணை தலைவர் ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகள் சின்ன பையன், முருகன், வெங்கடேசன், கலை செந்தில்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad