பாலக்கோடு, மார்ச் 31: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால், நகர செயலாளர்கள் கோவிந்தன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹிட் ஆக அதிகரித்து காணப்படுகின்றது. பொதுமக்களின் தாகம் தீர்க்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அறிவுறுத்தலின் பேரில், பஞ்சப்பள்ளி பேருந்து நிலையத்தில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, நீர்மோர், இளநீர், தர்பூசணி, பழங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி தொண்டர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக