அரூர் அருகே ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச மருத்துவ முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

அரூர் அருகே ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே எச். தொட்டம்பட்டியில், ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறுபான்மையினர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


முகாமினை தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர். பொன். பல ராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கே.ஏ.எஸ் மருத்துவமனை மற்றும் ஜேசிஐ ஈரோடு இணைந்து இந்த முகாமை நடத்தியது. முகாமில் மகப்பேறு, மகளிர் பிரச்சனைகள், எலும்பு மருத்துவ ஆலோசனை, பொது மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.


முகாமில் கலந்து கொண்ட கே.ஏ.எஸ் மருத்துவ குழுவினர்களுக்கு மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைச் செயலாளர் கேஸ். இராசந்திரன், விசிக சிறுபான்மை மாநில துணைச் செயலாளர் காதர்பாஷா, விசிக மகளிர் விடுதலை இயக்க மாவட்ட பொறுப்பாளர் சாக்கம்மாள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.


முகாமில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் கழகத் தலைவர் புனிதவள்ளி, துணைத் தலைவர் கலைவாணி, உறுப்பினர் வனிதா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. முகாமின் ஒருங்கிணைப்பில் பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், மருத்துவ குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக பங்கு பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad