மாரண்டள்ளி புதுத்தெருவில் கஞ்சா விற்ற பெண் கைது.! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

மாரண்டள்ளி புதுத்தெருவில் கஞ்சா விற்ற பெண் கைது.!


தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி சுற்றுவட்டார பகுதிகளில்  கஞ்சா விற்பனை செய்வதாக மாரண்ட அள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி,  சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று மாலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது புதுத்தெருவில் ஒரு பெண், கையில் மஞ்சப்பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை  பிடித்து விசாரித்தில் புதுத்தெருவை சேர்ந்த ஈஸ்வரி என்பதும், இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 


இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்  அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad